September 02, 2018
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் வைத்து இன்று காலை,
5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 13ஐ , தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை இறக்காமம் 3 ஆம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் வைத்தே, இன்று (03) காலை 8 மணியளவில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, சந்தேகநபரான அப்துல் லதீப் நிஷார் (வயது 39) என்பவரை கைதுசெ்யதுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்,
மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் அவரை ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment