August 6, 2018
இந்தோனேசியாவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் இதுவரை சுமார் 82 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் இடம்பெற்ற 7 ரிச்ட்டர் அளவு பூமியதிர்ச்சியால் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்திருந்தது.
இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்தன. எனினும் சில மணி நேரங்களுக்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment