06.08.2018
முடிவு கட்ட வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருப்பதால், துணிந்து செயற்பட சமூகத் தலைமைகள் ஒன்று பட வேண்டுகிறேன்.
இலங்கையில் மத்திய மாகாணத்திற்கு அடுத்ததாக போதைவஸ்துப் பாவனையில் கிழக்கு மாகாணமே இடம் பிடித்து இருக்கிறது அதிலும் அதிகமான முஸ்லீம் நகரங்களே போதைவஸ்துக்களுக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
நாமே ஒழுக்கத்திலும் இறைநம்பிக்கையிலும் பலமானவர்கள் என்றும் மார்தட்டும் அதே நேரம் போதைவஸ்து விற்பனையிலும் முஸ்லிம்கள் கொடிகட்டிப் பறப்பதாக ஏனைய சமூகங்கள் பிரச்சாரங்களை முன் எடுத்து வருகிறது .
குறிப்பாக எங்கள் பிரதேசம் கடந்த வருடங்களாக மிக வேகமாக போதைவஸ்துப் பாவணையிலும் விற்பனையிலும் கொடிகட்டிப் பறக்கிறது .
முன் ஒரு காலத்தில் மீனவர்களையும் கூலித்தொழிலாளிகளையும் பீடித்திருந்த போதை இப்போது மாணவர்கள் மட்டத்தில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது .
அதிகமான ஏழைக்கு குடும்பங்கள் போதை வஸ்துக்களால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு சில செல்வந்தர்களும் காரணமாக உள்ளனர் .
தங்களின் போதை வஸ்த்துப் பழக்கத்தை வெளியில் தெரிந்து விடாமல் ஏழைச் சிறார்களை தன் வசப்படுத்தி போதைக்கு அடிமையாக்கி, அவர்கள் மூலம் வியாபாரத்தை முன்னெடுத்து செல்லும் செல்வந்தர்கள் அதிகரித்துள்ளனர்..
.எமது மண்ணில் பாவனையில் உள்ள போதை வஸ்துக்களை பின்வருமாறு வகைப் படுத்த முடியும்
1 லேகியம் என்ற போர்வையில் சில்லரைக் கடைகளில் விற்கப்படும் ஒருவகை போதை ஊட்டக் கூடிய லேகியம்
2 . சித்தவைத்தியர்கள் எனக் கூறிக் கொள்ளும் [ பரிசாரி ] குறைந்தவிலையில் தயாரிக்கும் தூள்வகைகள் மற்றும் செல்வந்தர்களுக்குஎன ஒருவகை வயாக்கிரா இலேகியம் இது குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமே விற்கப் படுகிறது
3 . பார்மசிகளில் விற்கபப்டும் சோசிகன் போதைமாத்திரை .
4 .இந்தியாவில் இருந்து இறக்கப்பட்ட ஒருவகை போதை ஊட்டக் கூடிய மாத்திரைகள் இவைகளை மிக அண்மையிலேயே நமதூரிலும் அறிமுகம் செய்யப்பட்டது .
வெளிமருத்துவமனை மூலம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது .
5 . கோப்பி கஞ்சாவினால் தயாரிக்கப்பட்ட கோப்பித்தூள்கள்
.இதன் பாவனையாளர்களுக்கு பிரத்தியோக இடங்கள் கடற்கரை யோரங்கள், ஆற்றங்கரை பூங்காக்கள், போதைப்பாவனைக்கு என உள்ள குடிசைகள் தோட்டங்கள், புகையிரதப் பாதைகள், பாலடைந்த கட்டிடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
ஒவ்வொரு இடங்களிலும் ஐந்துக்கும் பத்திற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் பாவனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
இது மாலை நேர பொழுது போக்காகமாறியுள்ளது.
இதில் அதிகமானவர்கள் மாணவர்களும், இளைஞர்களுமே.
மிகவும் ஆபத்தான போதைவஸ்துகள்
6) .. .சரசு என்று அழைக்கப்படும் கேரோவின் வகையை சார்ந்தது இது கறுப்பு நிறத்தில் காணப்படும் அதிகம் போதை ஊட்டக் கூடிய ஒன்று
7) மஞ்சள் நிறத்தைக் கொண்ட கேரளாவின் வகையைச்சார்ந்த அதிகம் போதை தரக்கூடிய கஞ்சா
8) .பிரவ்ன் நிறத்தில் உள்ள அதிகம் போதை ஊட்டக் கூடிய கேரோயின்
9) .வெள்ளை நிறத்தில் உள்ள கஸீஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை போதை வஸ்துப பாவனை
10) ஊசியின் மூலம் உடலில் செலுத்தப்படும் ஒருவகை போதை
வெள்ளை நிறத்தில் உள்ள ஒருவகை தூள் இதுகொக்கையினாகும்.
இத்தனை போதைவஸ்துக்களும் எமதூரிலும் விறு விறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
இது மிக ஆபத்தான ஒன்றாகும் .
இப்பாவனையின் மூலம் உருவாகும் சமூக அமைப்பு மிக சிக்கல் நிறைந்தாதாவே காணப்படும் .
ஏனெனில் எமது பிரதேசத்தில் அதிகரித்துவரும் சமூக சீர் கேடுகளுக்கு இதுவும் பிரதான காரணியாக உள்ளது .
.நலிந்து போய் உள்ள ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழும் இளைஞர்கள் அதிக போதை வஸ்துப பாவனையில் விழுந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து தங்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி சீரழிந்து செல்கின்றனர் .
இந்த போதை வாஸ்துவின் தாக்கம் பாவனையாளர்கள் செய்யும் கொடுமைகள் வாய்களால் சொல்ல முடியாமல் எத்தனையோ குடும்பங்கள் மௌனமாக அழுது கொண்டு இருக்கிறது,
எமதூரில் எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கிறது .
ஜும்மா மேடைகளில் மாத்திரம் விடயத்தை சொல்லிவிட்டால் போதுமென்ற இருக்கின்றோம்.
போதை வஸ்து பாவணையிலும் விற்பனைகளிலும் ஈடு படுபவர்கள் பள்ளிவாயல் பக்கமும் வருவதில்லை.
படித்தவர்கள் உலமாக்கள் என்று இருப்பவர்கள் சுய நலத்தோடு யார் எப்படிப் போனால் என்ன,
நானும் எனது குடும்பமும் நன்றாகத்தானே இருக்கிறோம் .
ஊரென்ன சமூகமென்ன எக்கேடு கெட்டால் என்ன என்ற உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள் .
நாமெல்லாம் வெட்கித்தலைகுனிய வேண்டும் போதைப் பொருள் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போதும் கூட நாம்
மௌனமாகத்தானே இருக்கிறோம்.
இதனை ஒழிப்பதட்கு எமது பள்ளிவாயல் மஹல்லாக்களே போதுமானது .
அதிகாரம் உள்ள அமைப்புக்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை அமைத்து ஒவ்வொரு மஹல்லாக்கள் தோறும் விற்பனையாளர்கள் தகவல்களையும், பாவனையாளர்கள் தகவல்களையும் சேகரித்து அவர்கள் ஏன் போதை வஸ்த்து பாவனையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டு உளவள மற்றும் மாற்றீடாக தொழில் புரிவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
போதை வஸ்த்து பாவனையாளர்களுக்கு ஒவ்வொரு பள்ளிவாயல்களிலும் முகாம்களை அமைத்து உளவள செயற்பாடுகளையும் இஸ்லாமிய பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும் அச்ச மூட்டி எச்சரிக்கை செய்வதன் மூலமே இதனை ஒழித்துக் கட்ட முடியும் .
#நாம் #இன்னும் #விழித்துக் #கொள்ள #வில்லையாயின்
#முடமாகிப் #போன #ஒரு #எதிர்கால #சமூகத்தையே #உருவாக்குவோம்
என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை.
சிந்தித்து செயற்படுவோம்.
0 comments:
Post a Comment