Wednesday, August 22, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென கைதான நான்கு பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

23.08.2018

95 இலட்சத்து 71 ஆயிரத்து 320 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரண தொகையுடன் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான பெண்கள் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு வந்துள்ள போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் பிலியந்தலை , பத்தரமுல்லை , முல்லேரியாவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்த 46 முதல் 61 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment