August 16, 2018
உலகம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள சுய பணக் கொடுக்கல் வாங்களுக்கான ஏ.ரி.எம். இயந்திரங்களின் மீது பாரியளவில் பண மோசடிகளை மேற்கொள்ளும் விதத்திலான சைபர் தாக்குதல் இடம்பெறும் ஆபத்து உள்ளதாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. அமைப்பு சர்வதேச நாணய நிதியத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ.ரி.எம். அட்டைகள் போன்ற “க்லோன”அட்டைகளை பயன்படுத்தி இந்த சைபர் குற்றவாளிகள் கணக்கு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலுள்ள நிதியை திருடும் வாய்ப்பு உள்ளதாகவும் எப்.பீ.ஐ. அமைப்பு தகவல் வழங்கியுள்ளது.
வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் கணக்கு தொடர்பான தகவல்களைப் பெற்றே இந்த சைபர் திருட்டு இடம்பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளதனால், அத்தினங்களில் இந்த திருட்டு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் எப்.பீ.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.
சைபர் குற்றவாளிகளுக்கு தேவையாக இருப்பதெல்லாம், குறுகிய காலப்பகுதிக்குள் பாரிய நிதியை கொள்ளையிடுவதாகும். இதற்காக ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் எந்தவொரு நாடுகளில் இருந்து கொண்டும் செயற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாகவும் எப்.பீ.ஐ. நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.






0 comments:
Post a Comment