Thursday, August 16, 2018

பொலன்னறுவையில் இனந்தெரியாத நபர்களினால் 25 படகுகள் தீக்கிரை

August 16, 2018

பொலன்னறுவை, மனப்பிட்டிய மஹவெலி ஆற்றில் மணல் அகழ்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 25 படகுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (15) இரவு இவ்வாறு படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தீக்கிரையாக்கிய படகுகளில் 19 படகுகள் தனியார் நிறுவனம் ஒன்றினதும், ஏனைய 6 படகுகளும் வேறு ஒரு நபருடையதும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மணல் அகழ்வில் ஈடுபடும் சுமார் 500 ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment