August 16, 2018
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (16) மாலை 5.05 மணிக்கு காலமாகியுள்ளார்.
நீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் 10 ஆவது பிரதமராக 1996 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். இவர் மீண்டும் 1999 இலும் பிரதமராக பதவியேற்றார்.
2004 ஆம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment