August 06, 2018
இன்று 06.08.2018 பரீட்சை நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள நிலையில், முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம் மாணவிகளின் முக்காடுகள், வலுக்கட்டாயமாக கழற்றவும் செய்துள்ளனர்.
இதுகுறித்து பல முறைப்பாடுகள், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனுக்கு கிடைத்துள்ளன.
இவர் இதனை உடனடியாக ஐ.தே.க. தவிசாளர் கபீர் காசிமிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் கபீர் காசிம், கல்வியமைச்சர் அகிலவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து உரிய அறிவுரைகளை பரீட்சை அதிகாரிகளுக்கு வழங்குவதாக. கல்வியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை பரீட்சையின் போது, முஸ்லிம் மாணவிகளின் ஆடை உரிமை மறுப்பு விவகாரங்கள் நடைபெற்றால், அவற்றை உடனடியாக தமது கவனத்திற்கு கொண்டுவரும்படி என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முறைப்பாடு செய்ய
தொலைபேசி இல - 077261 2288
-AAM. Anzir-
0 comments:
Post a Comment