August 6, 2018
ஜனாதிபதி செயலகம் கடந்த ஆண்டு அமுலாக்கிய ‘சிறிசர பிவிசும’ என்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவ வீரர்கள் திருகோணமலை மாவட்டத்தில் 24 குளங்களைப் புனரமைத்துள்ளார்கள்.
அதன் அடுத்த கட்டமாக இவ்வாண்டு மேலும் 25 குளங்களின் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியாகவுள்ளன.
பிரதேசவாசிகளின் நலன்கருதி, கைவிடப்பட்ட நிலையில் உள்ள 9 குளங்கள் முன்னுரிமை அடிப்படையில் தூர்நீக்கி அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
‘சிறிசர பிவிசும’ வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேசத்தினதும் தேவைக்கு ஏற்ப பாடசாலைக் கட்டிடங்களும், நெடுஞ்சாலைகளும், வணக்கஸ்தலங்களும், சனசமூக நிலையங்களும் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment