Friday, July 6, 2018

வவுனியா மாவட்ட அதிபர் காலிக்கு உடனடியாக இடமாற்றம்- TNA அழுத்தம்

July 6, 2018


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்டிப்பான வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா மாவட்ட அதிபர் சோமரத்ன விதானபதிரன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

காலி மாவட்ட காரியாலயத்துக்கு இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சோமரத்ன விதானபதிரன வவுனியாவின் மாவட்ட அதிபராக பதவியேற்று ஒரு வருடம் கூட கழியாத நிலையில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வ மத மத்திய நிலையம் ஒன்றை அமைக்க இவர் முயற்சித்ததாகவும், அதன்போது அவர் புத்தர் சிலையொன்றை அங்கு வைப்பதற்கு எத்தனித்ததாகவும்  அரசாங்கத்துக்கு தவறான வியாக்கியானம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment