கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைக்கப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டத்தின் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான மேலதிக இணைப்பு பாதைகளை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 200 பில்லியன் ரூபாவை கடனுதவியாக வழங்கியுள்ளது. 15KM தூரம் வரையான இந்த இணைப்புப் பாதை 2020 இல் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment