08. 07. 2018
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடத்துவது என ஐக்கிய தேசிய . பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்தார்.
பழைய முறைமையில், தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புதிய தேர்தல் முறைமையின் கீழே மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடாக உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் அடுத்த வருடத்தில் மாகாண சபை தேர்தல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment