Sunday, July 8, 2018

அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்

July 8, 2018

2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய குழுவின் சிபார்சுகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக, துன்புறுத்தல், சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டோர் தமது நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்க அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் போன்று அமைப்புகளுக்கும் இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் கொலை, தாக்குதல் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்கள், ஊடக சேவையாளர்கள் தொடர்பான விண்ணப்பங்களைக் கோருவதற்கு அந்தக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான ஆலோசனைகளையும் விண்ணப்பங்களையும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களையும் ஆலோசனைகளையும் தொலைபேசி மற்றும் தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் ஊடகத்துறை அமைச்சிற்கு தபால் மூலம் அல்லது ரேநடியாகச் சமர்ப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்

0112-51-36-45, / 0112-51-34-69

0 comments:

Post a Comment