Saturday, July 7, 2018

இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் - மலேசியா அறிவிப்பு!


July 07, 2018 

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே கைதிகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், அதன்படி ஜாகீர் நாயக்கை நாடு கடத்தும்படி, ஜனவரி மாதம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மீண்டும் மத்திய அரசு சார்பில் மலேசிய அரசிடம் ஜாகீர்நாயக்கை இந்தியா அனுப்பக்கோரி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோலாலம்பூர் அருகே இருக்கும் புத்ராஜெயாவில் மலேசியா பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புவீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கால் எந்தவிதமான தொந்தரவும், பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். மலேசியா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கிறார் ஜாகீர் நாயக். ஆதலால், இந்தியாவுக்கு ஜாகீர் நாயக்கை திருப்பி அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தார்.

இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சால் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு தூண்டப்பட்டனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிபதி மன்மோகன் சிங் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment