Wednesday, July 4, 2018

நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு..


05.07.2018

மதுவரி திணைக்கள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்றி காவல்துறை அதிகாரிகளுக்கும், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன், சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

கம்பஹா காவல்துறையினரால் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டார்.

அதன்போது, கசிப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதி சார்பான சட்டத்தரணி வாதிட்டார்.

எனினும் அதனை நிராகரித்த நீதவான், மதுவரி திணைக்கள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் அறிவித்தார்.

Hiru

0 comments:

Post a Comment