, July 04, 2018
விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தான் அக்கருத்தை முன்வைக்கவில்லை என, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டிருந்த சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சந்திப்பின் இடைநடுவே, இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது, விடுதலை புலிகளுக்கு ஆதரவான தனது அறிவிப்பை நிராகரித்த விஜயகலா தனது கருத்து குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தான் விடுதலை புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறவில்லை என்றும், அது பதற்றத்தில் நா தடுமாறி வந்த வார்த்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிப்பதற்காக ஊடகங்களே இதனை பெரிதுபடுத்தியுள்ளதாகவும் விஜயகலா மேலும் தெரிவித்துள்ளார்.
Battinews
0 comments:
Post a Comment