Wednesday, July 4, 2018

வடக்கினையும் இணைத்தால் ஜனவரியில் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய


, July 04, 2018
 

ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரமளவில் எல்லைநிர்ணய பணிகள் உள்ளிட்ட ஆரம்ப பணிகள் நிறைவு செய்யப்படுமாயின், அடுத்த ஜனவரி மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை ரத்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்த மாதத்திற்குள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரைபடத்தின் பணிகள் நிறைவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை நிறைவு ,செய்யப்படும் பட்சத்தில் டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும், வடக்கு மாகாணத்தையும் இணைத்து ஆறு மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமாயின், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags: #தேர்தல் ஆணைக்குழு #

0 comments:

Post a Comment