07.07.2018
96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் மட்டக்களப்பிலுள்ள விஷேட இரண்டு இடங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்க பிள்ளையார் கோயிலில் இன்று காலை விஷேட பூஜை வழிபாடு கூட்டுறவு திணைக்கள அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பில் மிகவும் பிரபலமான விகாரையான மங்களராமய விகாரையில் விஷேட பூசை வழிபாடு இடம் பெற்றதுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கூட்டுறவு திணைக்களங்களின் அதிகாரிகள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment