Saturday, July 7, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு


07.70.2018

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அணியில் அங்கம் வகித்து வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாட ஏற்பாடு செய்திருந்த கூட்டம் தோல்வியடைந்துள்ளது.
FA
இந்த கலந்துரையாடலில் சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியில் எவரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எஸ்.பி.திஸாநாயக்க வெளிநாடு சென்று சில நாட்கள் தங்கியிருந்தார்.

நாடு திரும்பிய அவர், தமது அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

எனினும் 16 பேர் அணி என்று ஒன்று இல்லை என அவர்களில் பலர் கூறியுள்ளதுடன் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் 16 பேர் அணியில் இருந்து விலகி இருந்து செயற்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment