Monday, July 9, 2018

நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு காரணம் அரசாங்கமே - மகிந்த குற்றச்சாட்டு

09 JULY 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய விஜயகலா மஹேஸ்வரனின் கூற்று, அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

முத்தியங்கன ரஜமஹா விகாரைக்கு சென்ற அவர் அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனைக் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதாக விஜயகலா மகேஸ்வரன் கூறி இருக்கின்ற விடயம் பிழையானது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அந்த கூற்றின் பின்னணியில் சொல்லப்படாதவிடயம், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதாகும்.

அரசாங்கம் முழு மக்களையும் ஏமாற்றியுள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று மகிந்தராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேநேரம் அரசாங்கத்தின் இயலாமையாலேயே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hiru News

0 comments:

Post a Comment