09.07.2018
கல்முனை தேசிய வீடமைப்பு காரியாலய கட்டத்தொகுதியில் தற்காலிகமாக இயங்கி வருகின்ற கிழக்கு மாகாண பிராந்திய போக்குவரத்து சபை காரியாலயத்திற்கு நிரந்தரமாக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான முக்கிய நிகழ்வு இன்று (9)அரச தொழில் முயற்சிகள் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிராந்திய போக்குவரத்து சபையினுடைய செயளாற்று முகாமையாளர் ஆர்.எம்.பி விஜித மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை டிப்போ முகாமையாளர் எம்.ஜெளபர் பிரதேச செயலாளர் எம்.எச் முஹம்மட் கனி,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே இராஜதுறை,சமூர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர் சாலிஹ் மற்றும் காணி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் பிராந்திய காரியாலத்திற்கு என பிரதேச செயலாளர் அவர்களினால் சுமார் 40பேர்ச் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment