July 4, 2018
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி தரையில் சடலமாகவும் கிடந்தார்.
அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைத்த சில முக்கிய தகவல்கள் பொலிசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திலில் இருந்து கைப்பட எழுதிய டைரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட 9 செல்போன்கள் சைலன்ட் மோடில் அங்குள்ள டிராவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த டைரியில் எப்படியும் கடைசி நேரத்தில் கடவுகள் எங்களை காப்பாற்றி விடுவார். எங்களுக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது
வீட்டின் சுவரில் 11 குழாய்கள் இருந்துள்ளன, ஆனால் அவை தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை.
சம்மந்தமே இல்லால் அவர்கள் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 11 பைப்புகள் மரணத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பைப்புகள் நேரானதாகவும், 7 பைப்புகள் வளைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்களுக்கு நேரான பைப், மீதமுள்ள வளைந்த பைப்புகள் 7 பெண்களை குறிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது ஆன்மா வெளியேற இந்த பைப்புகள் பதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வீட்டின் பிரதான கதவில் மொத்தமாக 11 இரும்புக் கம்பிகள் இருந்துள்ளன. வீட்டின் பிரதான கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது.
தற்கொலை செய்யும் போது அதிசக்திகள் வந்து தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கதவை பூட்டாமல் வைத்திருக்கலாம். இல்லையெனில் 12-வதாக ஒரு நபர் அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் என்ற இரு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இறப்பதற்கு முன் குடும்பத்தினர் 20 சப்பாத்திகளை ஆர்டர் செய்துள்ளனர்.
உயிரிழந்த 11 பேரின் கண்கள் கட்ட ப்படிருந்தன. காதுகள் பஞ்சால் அடைக்கப்பட்டிருந்தன. வாய் ஒட்டப்பட்டிருந்தது. அதில் 9 பேரின் மூட்டுக்களும் கட்டப்பட்டிருந்தது.
உயிரிழந்த 11 பேரில் 9 பேர் சீலிங் பேனில் இரும்புக் கம்பியில்தொங்கிக் கொண்டிருந்தனர்.
வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் 2-வது தளத்தில் கட்டப்பட்டிருந்தது. நாயை பொலிசார் கண்டபோது அது அதிக காய்ச்சலில் இருப்பதும் தெரியவந்தது.
0 comments:
Post a Comment