June.23.2018
சிறையில் வைக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கருகில் உள்ள விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெள்ளை விரிப்பு விரிக்கப்பட்டு மலர் தூவி பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்களாலும் அவ்வமைப்பின் ஆதரவாளர்களாலும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 மாதங்களுள் அனுபவிக்கக்கூடிய 1 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்றைய தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றினால் இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment