24.06.2018
அம்பாறை நகர சபையின் நகராதிபதி சமிந்த அவர்களின் தலைமையில் பொது ஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பசில் ராஜபக்ச அவர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல சிங்கள தமிழ் முஸ்லீம் பொது ஜன பெரமுன கட்சி உறுப்பினர்களையும்,ஆதரவாளர்களையும் இன்று 24 அம்பாறை நகர சபை மண்டபத்தில் சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொது ஜன பெரமுன கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரதேச அமைப்பாளர் M.A.சஹிநியாஸ் அவர்களும் இறக்காமம் பிரதேச பொதுஜன பெரமுனவின் கட்சியின் அமைப்பாளர் எஸ்.எம்.இர்ஷாத் (அதாப்)அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்தோடு இந்நிகழ்வில் புதிய உறுப்பினர்களும் ஏனைய கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் இக் கட்சியில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment