Monday, June 11, 2018

அஞ்சல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்



 , 11 JUNE 2018


பல்வேறு விடயங்களை வலியுறுத்தி, ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர்களின் தொழிற்சங்கம் இன்று பிற்பகல் 4 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தங்களது அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் அன்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை அஞ்சல் சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அனைத்து அஞ்சல் சேவையாளர்களது விடுமுறையையும் ரத்து செய்வதாக, அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேவர்தன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

அதேநேரம், மின்சார பொறியியலாளர்களது மட்டுப்படுத்தப்பட்ட பணிப் புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொருட்டு, தற்சமயம் ஆராயப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு குறைந்த செலவில் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் திட்டத்துக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள போதும், அதில் சிற்சில சிக்கல்கள் இருப்பதாக, மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌம்மியா குமாரடு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment