Monday, June 11, 2018

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா



June 11, 2018

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த இறுதி தவணைப் பணமான, 585 மில்லியன் அமெரிக்க டொலரை தற்காலிகமாக இடைநிறுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.


ஹம்பாந்​தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தீவு பகுதியை பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த சீனா அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு இலங்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சீனா செலுத்த வேண்டிய இறுதி தவணைப் பணத்தை செலுத்தாது இவ்வாறு தாமதித்து வருவதாக தெரியவருகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, கடந்த வருடம் டிசம்பர் மாதம், 1.12 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ,99 வருடகால குத்தகையின் அடிப்படையில் சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க இலங்கை பெற்றிருந்த கடனை மீள செலுத்துவதில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக, இதனை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், கடற்படை மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் தீவுப் பகுதியை பயன்படுத்துமாறு, இலங்கை துறைமுக அதிகார சபை சீனாவுக்கு அறிவித்துள்ள போதிலும், அவர்கள் பணத்தை செலுத்துவதில் மேலும் தாமதம் காட்டி வருகின்றனர் என, தெரிவிக்கப்படுகிறது.


இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றதும், இறுதி தவணைப் பணத்தை செலுத்தவுள்ளதாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு பெற்றுள்ள, சைனா மெர்ச்சண்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment