Monday, June 11, 2018

சவூதிக் கூட்டணி நாடுகளின் மருந்துப் பொருட்களை நீக்க கத்தார் அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!



June 11, 2018 
கத்தார் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கத்தாரில் உள்ள அனைத்து மருந்து விற்பனை நிலையங்களும், பாமசிகளும், சவூதிக் கூட்டணி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துப் பொருட்களையும், நீக்குமாறு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இவ்வாறு நீக்கப்பட்ட பொருட்களை மீள அவர்களிடமே ஒப்படைக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கமைய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கத்தாரில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளும் பரிசோதனை செய்வார்கள் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபோல கடந்த 26ம் திகதி சவூதிக் கூட்டணி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அணைத்து பொருட்களை நீக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கு மாற்றீடான பொருட்கள் ஏற்கனவே சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என்பதாக மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment