24.06.2018
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை இன்றுடன் முடிவுக்கு வந்தது
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனத்தை இயக்குவதற்கு பல தசாப்த காலங்களாக நீடித்து வந்த தடை தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்ற மாதம் முதல் முறையாக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.
உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஒரே நாடாக விளங்கிய சவூதி அரேபியாவில், பெண்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் தனியார் ஓட்டுனர்களை நியமிப்பதே ஒரே வழியாக இருந்து வந்தது.






0 comments:
Post a Comment