20.12.2018
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தும் விலைச் சூத்திரம் மீண்டும் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சராக இன்று பதவியேற்ற மங்கள சமரவீர கூறினார்.
இன்று அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைவாக உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்காக எரிபொருள் விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் எரிபொருள் விலைச் சூத்திரம் நீக்கப்படுவதாக கூறியிருந்தார்.






0 comments:
Post a Comment