November 3, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.க்களான பீ. சரவணபவன், ரி. சித்தார்த்தன் ஆகியோரும், கிளிநொச்சி மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீ தரன், முல்லைத்தீவு மாவட்ட எம்.பி. சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோருமே இவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளவர்கள் எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஆரம்பத்தில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லையென்ற நிலைப்பாட்டில் இருந்தேன் எனவும், பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் இன்றோ (03) அல்லது மறுநாளோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளேன் எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளதாகவும் சகோதார மொழி ஊடகமொன்று அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment