Saturday, November 3, 2018

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தொடர்ந்தும் STF பாதுகாப்பு

03.11.2018

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு தொடர்ந்தும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஆர் லத்தீப் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

நேற்று மாலை முதல் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு காவல்துறை அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hiru

0 comments:

Post a Comment