Saturday, November 3, 2018

5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இலங்கையின் வானிலை!!


03.11.2018

நாட்டின் தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக, எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இந்த வானிலை நிலைமை ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து சரியான தகவல்களை விரைவில் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பித்துள்ளார்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றம் வடமேல் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் 100 முதல் 150 மி.மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதியில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment