03.11.2018
எதிர்வரும் ஏழாம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு சபாநாயகர் முயற்சித்தால் அவருக்கு எதிராக அரசியல் அமைப்பு ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையில், சபாநாயகர் அதற்கு எதிராக செயற்படுவது சட்டவிரோதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்றத்தை கூட்டினால் அதற்கு உதவும் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கெஹலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment