November 11, 2018
SLFP + SLPP தேர்தல் கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் இடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பெசில் ராஜபக்ஷ மற்றும் மைத்த்திரிபால உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி , பொதுஜன பெற உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளை இணைத்துகொண்டு புதிய ஒரு சின்னத்தில் போட்டியிட தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் பொதுஜன எக்சத் பெரமுன எனும் கூட்டணி தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment