03.11.2018
பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் ஹங்வெல்ல – எம்புல்கம பகுதியில் வியாபார நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட இரண்டு பாதாள குழு உறுப்பினர்கள் காவல்துறை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாம்புலகே என அழைக்கப்படும் ஊருஜூவா என்ற பாதாள குழு தலைவரின் ஆதரவாளர் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி, ஜல்தர பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
குறித்த பாதாள குழு உறுப்பினரின் இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றன.
இதனால் வியாபார நிலையங்களை மூடுமாறு அந்த பாதாள குழு தலைவர் பணித்ததின் பிரகாரம் குறித்த இருவரும் வியாபார நிலையங்களை மூட முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறை அதிரடிப்படையினர், அனைத்து வியாபார நிலையங்களையும் திறந்து வைத்ததுடன், இருவரை கைதுசெய்து ஹங்வெல்ல காவல் நிலையத்தின் ஒப்படைத்தனர்.
ஊருஜூவா என்ற குறித்த பாதாள குழுத் தலைவர், கொலை செய்யப்பட்ட சமயங் என்ற பாதாள உலகக் குழு தலைவரின் நெருங்கிய ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment