03.11 2018-
இந்தியாவை புறக்கணித்து விட்டு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணமாட்டோம் என்று, இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தமைக்காக , இலங்கை சீனாவை நோக்கி நகராது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொருத்தவரை இரு மிகப்பெரும் நண்பர்களை கொண்டிருப்பதை சாதகமான விடயமாக கருதுகின்றது. இலங்கை ஒரு பக்கம் சாய்வதில் பலனில்லை இந்தியாவுடன் நட்பாக உள்ளோம் என்பதற்காக சீனாவுடன் சிறந்த உறவை பேணவில்லை என கருத முடியாது.
சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் விதிமுறைகள் மிகவும் சாதகமானவையாக காணப்பட்டன. அதிகாரத்துவ நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன. என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளின் உதவியுடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதை விட சீனாவின் உதவியுடன் மிகவேகமாக திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். சீனாவிடமிருந்து கடன்களை பெறுவதில் பிரச்சினைகள் குறைபாடுகள் உள்ளபோதிலும் ஒட்டுமொத்தத்தில் சீனாவிடமிருந்து உதவியை பெறுவது சிறந்த மூலோபாய முடிவு என நான் கருதுகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment