Monday, November 5, 2018

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்- ஜனாதிபதி இன்று விளக்கவுரை

November 5, 2018

முன்வைத்த காலை ஒரு போதும் பின் வைக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பாராளுமன்ற சுற்றுவட்டப் பாதையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து இன்று(05) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கரு ஜயசூரியவுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நான் தெரிவித்தேன். இருந்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். பின்னர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுத்தேன். அவரும் அதனை நிராகரித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்ற முடியாமல் போனதால் மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க தீர்மானித்தேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவினை பெற்று விட்டதாகவும், அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment