Monday, November 5, 2018

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் கெட்டிய மேளத்தை கொட்டியிருப்பேன்- பிரதமர் மஹிந்த

November 5, 2018


சமகாலத்தில் தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்திருக்க மாட்டேன் எனவும், கெட்டிய மேளத்தைக் கொட்டியிருப்பேன் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தை யாருடையவும் ஏச்சுப் பேச்சுக்களுக்காகவும் தேவையற்ற கதைகளுக்காகவும் சரிந்து விழ இடமளிக்க மாட்டேன் எனவும்   பிரதமர்  கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் 3 வருடமும் 10 மாதங்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லை பாராளுமன்ற சுற்றுவட்டப் பாதையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து இன்று(05) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment