November 9, 2018
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வழங்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் அனைவரும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களாக (காபந்து அரசாங்கமாக- Care Taker Government ) செயற்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒழுங்கு முறைப்படியான தேர்தல் ஒன்று நடைபெற்று அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்கும் வரையில் இந்த காபந்து அரசாங்கம் செயற்படவுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தாலும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த காபந்து அரசாங்கம் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்த அனுமானங்கள் பல தெரிவிக்கப்பட்ட போதிலும், பெப்ருவரி மாதத்தில் தேர்தல் நடாத்தப்படலாம் என்ற கருத்தே பலமானதாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி இன்று இரவும் கபினட் அமைச்சர்கள் சிலரை உடனடியாக நியமித்திருந்தார். இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு, இன்று மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதேவேளை, ஏற்கனவே வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுக்களும், பிரதி அமைச்சுக்களும் வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் செயலிழந்து போகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment