04.11.2018
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தீர்மானம் நழுவல் போக்கில் உள்ளதாலும், ஒரு நிலைப்பாட்டு தீர்மானத்தினை ஹக்கீம் மேற்கொள்ளாமையினால் மகிந்த, மைத்திரி அணியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று (03) ஜனாதிபதியை சந்தித்து பேசியதற்கிணங்க நாளை உத்தியோகபூர்வமாக அரசுடன் இணைந்து அமைச்சு பதவியொன்றையும் பெற தீர்மானித்துள்ளதாக உறுதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் மூலம் தெரியவந்தது.
ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் அலி சாஹிர் மெளலான ஆகியோர் மகிந்த அணியுடன் இணைவதற்கான வாய்புகள் இருந்தும் அவர்களின் கட்சியின் தலைவரின் தடுத்தலுக்காக தொடர்ந்தேர்ச்சியாக பொறுமைகாத்தினர்.
ஆனால் ஹரீஸ் எம் பி மகிந்த சார்ந்தவர்களுடன் தொடர்பினை வைத்துக்கொண்டுள்ளதாகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சைப் பெற்று மகிந்த அணியில் இணைவார் என கூறப்பட்டும், மிக விரைவில் அது சாத்தியமாகும் நிலை காணப்படுகின்றது, குறித்த இத்தீர்மானத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்திற்கு நண்மை கிட்டவுள்ளதால் நாமும் இவரின் துணிச்சலான தீர்மானத்திற்கு வாழ்த்துவோம்.
அதற்கிடையில் அலி சாஹிர் மெளலான இத்தீர்மானத்தினை அவசரமாக மேற்கொண்டுள்ளதை மு.காவின் முகநூல் எழுத்தார்கள் முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல் மறைத்துக்கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சி இஸ்மாயில் பக்கம் திசைதிருப்பி வருவருவது நகைப்புக்குறியதாகும்.
மு.கா தலைவர், அவருடைய சொந்த தேர்தல் மாவட்டத்தின் நிலை கருதியும் , தனது எதிர்கால அரசியல் இருப்பு, தனது வாக்கின் நிலை காரணமாகவே இதுவரை மெளனியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பு: இன்று காலை ஜனாதிபதியுடன், அலி சாஹிர் மெளலான, ஹிஸ்புல்லாஹ், ரோஹித போகல்லாகமகே கலந்துகொண்ட புகைப்படம் எம்மிடம் உண்டு என
வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்திக்குழு தெரிவிக்கிறது.
நன்றி
-சப்னி
வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்திக்குழு
0 comments:
Post a Comment