November 4, 2018
அமைச்சுப் பதவிகள் பெற்றுள்ள 8 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாக்கு அளிக்கப்படும் நேரத்தில் அது வெளிப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்தில் அவர்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பார்கள் எனவும் மத்துமபண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் சகோதார மொழி வானொலிச் சேவைக்கு தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Daily Ceylon
0 comments:
Post a Comment