Sunday, November 4, 2018

நாட்டை உலுக்கும் துண்டிக்கப்பட்ட தலை!

05.11.2018

பண்டாரகம – பொல்கொல்ல பாலத்திற்கு அருகில் கிளை வீதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட தலையும், எம்பிலிபிட்டிய – செவனகல – கிரிஇப்பன் குளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட முண்டமும் ஒரே பெண்ணுடையதா? என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பெண்ணொருவர் உடையது என சந்தேகிக்கப்படும் துண்டிக்கப்பட்ட தலை, பண்டாரகம – பொல்கொல்ல பாலத்திற்கு அருகில் கிளை வீதியொன்றில் இருந்து நேற்று காலை மீட்கப்பட்டது.

குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு அவரின் தலை குறித்த இடத்தில் கைவிட்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தலைப்பகுதி, சீனா அல்லது தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்நிலையில் எம்பிலிபிட்டிய – செவனகல – கிரிஇப்பன் குளத்தில் இருந்து தலை மற்றும் கால்கள் இன்றி சடலம் ஒன்றை நேற்று மாலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹக்மன – கெபலியபொல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர் ஹக்மன பிரதேச சபையின் பொதுஜன முன்னணியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

உந்துருளி மற்றும் வேன் ரக வாகனத்தில் வந்த தரப்பினர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹக்மன – நரவெல்பிட்ட பகுதியை சேர்ந்த 53 வயதான பிரதேச சபை உறுப்பினரே உயிரிழந்துள்ளார்.

Hiru

0 comments:

Post a Comment