Sunday, November 4, 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதித் தீர்மானம் இன்று


November 5, 2018

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுத்தீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று (5) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் முக்கிய கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையின் அடிப்படையில் முன்னெடுக்கவுள்ள தீர்மானம் குறித்து இன்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிடனும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் இன்றைய கூட்டம் இடம்பெறுவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஏற்கனவே, இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment