November 9, 2018
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (09) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்குரிய விடயதானங்களை உள்ளடக்கியதாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த மாற்றங்களுடன் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 18 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பொலிஸ் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Daily Ceylon
0 comments:
Post a Comment