Monday, November 5, 2018

முஸ்லிம் காங்கிரஸ் தீவிர கலந்துரையாடலில்

04,11.2018

ஸ்ரீலாங்க முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்றில் கட்சியின் உயர் மட்டங்கள் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய தினம் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தநிலையில், மாவட்ட அமைப்பாளர்களுக்கு இடையிலான இந்த சந்திப்புக்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆராயப்படவுள்ளது.

இந்த சந்திப்புக்கள் தொடர்ச்சியாக ஒரு சில நாட்களுக்கு இடம்பெறும் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் புதன் கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

0 comments:

Post a Comment