Monday, November 5, 2018

இன்று மாலை மஹிந்தவுடன் இணையவுள்ள ஐவர்...! சற்று முன்னர் வௌியான செய்தி..!


04.11.2018

நாடாளுமன்றில் எதிர்வரும் 14 ஆம் திகதி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திலேயே அடுத்த பிரச்சினை தோற்றம் பெறும் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மேலும் ஐவர் புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளனர் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment