Monday, October 1, 2018

இறக்காமம் அமீர் அலி வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு

(படங்கள்)

02.10.2018

இவ்வருடத்திற்கான உலக சிறுவர் தினத்தின் தொணிப்பொருள்.
"தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது சிறுவர்களை பலப்படுத்துவோம் "என்ற தொணிப்பொருளில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதே நேரத்தில் இறக்காமத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சிறுவர் தினம்  கொண்டாடப்பட்டு வருகின்ற வேளையில் இறக்காமம் அமிரலிபுர பாடசாலையின் அதிபர் ஐ.எல் பரீட் அவர்களின் தலைமையில் நேற்று(01)     இடம்பெற்றது.

இதே நேரம் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம் இர்ஷாத் அதாப் அவர்களின் ஏற்பாட்டில்  குளிர்பானங்களும் பரிசுப் பொதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்ட தமன பொலிஸ் பொறுப்பதிகாரி பெண்கள் பொலில் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி அல் அஷ்ரப் பாடசாலையின் முன்னாள் அதிபர் இஸ்மாயில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர்
ஜே.கலீலுர்ஹ்மான்(தாஹிர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை ஏனைய பாடசாலையான இறக்காமம் ரோயல் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வு றோயல்கனிஷ்ட கல்லூரியில் அதிபர் ஐனுல் றிபாயா நஸீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்று
சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ. எல் மஹ்மூது லெவ்வை ஆசிரிய ஆலோசகர்
யூ எல்.ஜெபீர் நிருவாக உத்தியோகாத்தர் ஜே எம்.ஜெமீல்
மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் 
இறக்காமம் பிரதேச சபை  தவிசாளர் ஜே.கலீலுர்ஹ்மான்
தாஹிர் பிரதித்தவிசாளார்
ஏ.எல் நௌபர் மௌலவி மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் 
கலந்து கொண்டனர்.

மேலும் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பின்வரும வாசகங்களை ஏந்திய வண்ணம் ஒலிபெருக்கியில் கூறியவாறு ஊர்வலம் சென்றனர்.

#எங்கள் கருத்துக்களுக்கு எல்லோரும் மதிப்பளியுங்கள்.

#எங்கள்மீது இரக்கம் காட்டுங்கள்

#எங்களை உளரீயாக நெருக்கீடு செய்யாதே!

#சிறுவர்களை போதைவஸ்த்துக்கு அடிமையாக்காதே!

#சிறுவர்களை தண்டனை வழங்கி துஸ்பிரயோகம் செய்யிதே!

#கொஞ்ச நேரம் எங்களை விளையாடுவதற்கு சுதந்திரம் கொடு!
போன்ற வாசகங்களை ஏந்திச்  கூறிச்சென்றதையும் காணக்கூடியதாகவுள்ளது.

0 comments:

Post a Comment