01.10.2018
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு அதன் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை ஸ்தாபித்து எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த வருட பூர்த்திக்கு முன்னதாக கட்சியின் சம்மேளனத்தை கூட்ட தீர்மானித்துள்ளோம்.
இதன்போது கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதியை கோரவுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment