Monday, October 1, 2018

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே.எம் மன்சூர்

October 01, 2018
 
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மன்சூர் அவர்கள் ஆளுநரினால் உடன் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிசாம் அவர்கள் கிழக்கு மகாண சிரேஸ்ர மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

கல்வி நிருவாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த எம்.கே.எம் மன்சூர் அவர்கள் வலயக் கல்வி பணிப்பாளர், மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர், போன்ற  பதவிகளில் இருந்து தற்பொழுது பதவி பெறும் வரை மாகாண கல்வி திணைக்களத்தில் வெற்றிடம் இல்லாத நிலையில் கடமையாற்றி வந்தார்.
இந் நிலையிலையே மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கிழக்கு மாகண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களையே குறித்த பதவிக்கு சீபார்சு செய்யப்பட்ட நிலையில்  குறித்த நியமனத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

0 comments:

Post a Comment