24.10.2018-
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஜேவிபி முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பதற்காக வரவு செலவுத் திட்ட விவாதங்களை பயன்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கம் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை தற்போது நிருபித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்துக்கு முன்பாகவே மக்களிடம் வரி சுமையை சுமத்தி, அரச நிறுவனங்கள் மற்றும் அரச சொத்துக்களை விற்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Seithi.Com






0 comments:
Post a Comment